சாலையில் கேட்பாரற்று கிடந்த சடலத்தின் மீது வாகனங்கள் தொடர்ச்சியாக சென்றதால் உயிரிழந்தவரின் எலும்புகள் மட்டுமே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அம்பே ரோ பகுதியில் உள்ள தில்லி லக்னோ தேசிய நெடுங்தாலையில் இன்று காலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் ஒன்று சாலையிலேயே கிடந்துள்ளது. அதை யாரும் அப்புறப்படுத்தாததால் அதற்கு பின்னால் வந்த வாகனங்கள் அந்த சடலத்தின் மீது ஏறி சென்றுள்ளது.

Advertisment

இவ்வாறு தொடர்ச்சியாக 12 மணி நேரம் சென்றதால் அந்த சடலம் உருகுலைந்த நிலையில் கிடந்துள்ளது. உடலில் எலும்புகளை தவிர வேறு எந்த பகுதியும் கிடைக்கவில்லை. உடற்கூறு செய்ததில் இறந்தவர் ஆண் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் டிஎன்ஏ மாதிரி பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.