Advertisment

திமுக 39 இடங்கள், பாஜக 233; மக்களைவை தேர்தல் கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன..?

ghjnmhg

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எபிபி செய்தி நிறுவனமும், சி வோட்டர் அமைப்பும் இணைந்து மக்களவை தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளன. அதன்படி இந்த முறை எந்த கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி பாஜக 233 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 167 இடங்களிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள மற்ற கட்சிகள் 143 இடங்களில் வெற்றி பெரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 39 இடங்களில் திமுக வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி கூட்டணிக்கு 51 இடங்களும், பாஜக வுக்கு 25 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisment

congress opinion poll
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe