About burnt tea shop; Chitai escaped employees

டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒட்டுமொத்த டீக்கடையும் கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைந்துள்ள முதலக்குளம் பகுதியின் முக்கிய சாலை பகுதியிலேயே உள்ள டீக்கடை ஒன்றில் கடையின் உரிமையாளர் வழக்கம்போல இன்று கடையைத்திறந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கடையில் தீப்பற்றியதோடு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் டீ குடிக்க வந்தவர்கள் என அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பி வெளியே ஓடி வந்தனர். தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment