Advertisment

 மனரீதியாக துன்புறுத்தப்பட்ட அபிநந்தன்?

பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

n

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அபிநந்தன் கூறியதாக முன்னர் வெளியான வீடியோ பதிவுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை துன்புறுத்தவில்லை. நல்லமுறையிலும், கண்ணியமாகவும் பார்த்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

RSS Indian Army mohan bhagwat Pakistan abinandhan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe