Abhinandan Varthaman

Advertisment

2019ஆம் ஆண்டுபுல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதுஇந்தியா. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இராணுவ விமானங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றன.அப்போது விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின்எஃப் 16ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். அதேநேரத்தில்பாகிஸ்தானின்எஃப் 16 விமானம் நடத்திய பதில் தாக்குதலினால்அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் குதித்த அவரைபாகிஸ்தான் சிறைபிடித்தது. அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகுஅபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் பின்னர்அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது இன்று (22.11.2021) வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதைவழங்கினார்.