அபிஜித் பானர்ஜி, பிரதமர் மோடி சந்திப்பு...

2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர், மைக்கேல் கீரிமர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக இந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

abhijit banerjee meets modi

இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை பயின்றவர் ஆவார். இந்தியர் ஒருவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றதற்கு பல தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தநிலையில், இன்று நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு அருமையாக அமைந்தது. மனித உரிமைகள் குறித்த மிகத்தெளிவான சிந்தனைகள் கொண்டவர் அவர். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். அவரது சாதனைகளால் இந்தியா பெருமையடைந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

abhijit banerjee modi
இதையும் படியுங்கள்
Subscribe