போலியாக தனது கையெழுத்தை போட்டு ரூ.4.5 கோடி கடன்பெற்றதாக தனது பிஸ்னஸ் பார்ட்னர்கள் மீது கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி புகார் கொடுத்துள்ளார்.
சேவாக்கின் மனைவி ஆர்த்தி, விவசாய பொருட்கள் உற்பத்தி சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளார். இவருடன் சேர்த்து அந்த நிறுவனத்தில் மேலும் சிலர் பார்ட்னர்களாக உள்ளனர். இந்நிலையில் தனது பார்ட்னர்கள், தன்னை ஏமாற்றி போலி கையெழுத்துக்களை போட்டு வங்கியில் 4.5 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர் என காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வங்கியில் கடன் கிடைப்பதற்காக தனது கணவர் ஷேவாக்கின் பெயரையும் தவறாக உபயோகித்துள்ளதாக புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.