Skip to main content

சேவாக்கின் மனைவி காவல்துறையிடம் புகார்... போலி கையெழுத்து போட்டு ரூ. 4.5 கோடி மோசடி...

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

போலியாக தனது கையெழுத்தை போட்டு ரூ.4.5 கோடி கடன்பெற்றதாக தனது பிஸ்னஸ் பார்ட்னர்கள் மீது கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

 

aarti sehwag files complaint on her business partners

 

 

சேவாக்கின் மனைவி ஆர்த்தி, விவசாய பொருட்கள் உற்பத்தி சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளார். இவருடன் சேர்த்து அந்த நிறுவனத்தில் மேலும் சிலர் பார்ட்னர்களாக உள்ளனர். இந்நிலையில் தனது பார்ட்னர்கள், தன்னை ஏமாற்றி போலி கையெழுத்துக்களை போட்டு வங்கியில் 4.5 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர் என காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வங்கியில் கடன் கிடைப்பதற்காக தனது கணவர் ஷேவாக்கின் பெயரையும் தவறாக உபயோகித்துள்ளதாக புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இந்தியா பெருமை சேர்க்கவில்லையா" - விஷ்ணு விஷால் ஆவேசம்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

vishnu vishal questioned virendar shewag

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

 

இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதில் பாரதம் என்று அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அமிதாப் பச்சன், "பாரத் மாதா கீ ஜே" எனப் பதிவிட்டுள்ளார். 

 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் எங்கள் உண்மையான பெயர் 'பாரத்'. அதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ-யை வலியுறுத்துகிறேன்" எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

இந்த பதிவை நடிகர் விஷ்ணு விஷால் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இத்தனை வருடங்களில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா" என சேவாக்கை கேள்வி கேட்டுள்ளார்.  

 

 


 

Next Story

ஆதிபுருஷ் - ரசிகர்களை ஓவர்டேக் செய்த வீரேந்திர சேவாக்

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Virender Sehwag about adipurush

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16 ஆம் தேதி 3டியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் மோசமான வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூலில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இப்படம் ரிலீசுக்கு முன்பே இந்து மத உணர்வைப் புண்படுத்தியதாகப் பல்வேறு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ரிலீசுக்கு பின்பும் அது தொடர்கிறது. படம் ரிலீசான முதல் நாளில் திரையரங்கின் முன்பு ஒரு ரசிகர் படம் நன்றாக இல்லை என விமர்சித்திருந்தார். உடனே அருகில் இருந்த ரசிகர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். இதுபோன்று சமூக வலைத்தளங்களில் பலரும் படத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ரசிகர்களை விட ஒரு படி மேலே போய், "ஆதிபுருஷ் பார்த்ததும் தான் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனத் தெரிய வந்தது" என கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.