Advertisment

பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி

AAP gets majority ends BJP's rule in Delhi civic body

Advertisment

15 ஆண்டுகளாகபாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியைஆம் ஆத்மி கைப்பற்றி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது.

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலை முதலே ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள250 வார்டுகளில் 126 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 97 வார்டுகளில் பாஜகவும், 7 வார்டுகளில் காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. 15 ஆண்டுகளாகபாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi aap
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe