Advertisment

கெஜ்ரிவால் வீட்டிற்கு வெளியே குப்பைகளைக் கொட்டி போராட்டம்; ஆம் ஆத்மி எம்.பி குண்டுக்கட்டாக கைது!

Aam Aadmi MP swati maliwal arrested for struggle by dumping garbage outside Kejriwal's house

Advertisment

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தலைநகர் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே குப்பைகளை கொட்டி போராட்டம் செய்த ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சுவாதி மாலிவாலை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு சென்ற எம்.பி சுவாதி மாலிவால், அந்த குப்பைகளை எடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு வெளியே கொட்டி டெல்லியில் சுகாதாரம் சரியில்லை என்று தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து, போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுவாதி மாலிவால், “முழு நகரமும் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது. நான் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேச இங்கே வந்தேன். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் பொதுமக்கள் உங்களை சீர்திருத்துவார்கள் என்று சொல்ல வந்தேன். நான் அவருடைய அடியாட்களையோ அல்லது அவரது போலீசாரையோ கண்டு பயப்படவில்லை” என்று பேசினார்.

Advertisment

கடந்த ஆண்டின் போது, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதி திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், சுவாதி மாலுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe