Advertisment

குஜராத்தில் ஆம் ஆத்மி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! 

arvind kejriwal

2022ஆம் ஆண்டு குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால், அதனை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கிவிட்டன. அதேசமயம் தேர்தலையொட்டி சில கட்சிகளுக்குள் உட்கட்சி பூசல்களும் வெடித்துள்ளன.

Advertisment

இதற்கிடையே குஜராத்தில் இன்று (14.06.2021) ஆம் ஆத்மிகட்சியின் மாநில தலைமை அலுவலகத்தைத் திறந்துவைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், குஜராத்தின்அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மிதனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

Advertisment

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், "குஜராத்தில் உள்ள மக்கள், டெல்லியில் மின்சாரம் இலவசமென்றால்ஏன் இங்கேயும் இலவசமாக இருக்க கூடாது என நினைக்கிறார்கள். அதேபோல் கடந்த 70 ஆண்டுகளாக மருத்துவமனைகளின் நிலை முன்னேறவில்லை. ஆனால் தற்போது அனைத்து விஷயங்களும் மாறும்" என கூறியுள்ளார்.

Aam aadmi Aravind Kejriwal Assembly election Gujarat
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe