Skip to main content

மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் முக்கிய முடிவு...

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

gfhghgh

 

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என பேசப்பட்டு வந்த நிலையில், ஆம் ஆத்மீ கட்சியுடன் கூட்டணி இல்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 7 தொகுதிகள் கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சி ஏற்கனவே 6 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று காலை ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆம் ஆத்மீயுடன் கூட்டணி இல்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்