Advertisment

காங்கிரஸ் கட்சிக்கு தாவும் 9 ஆளும்கட்சி எம்.எல்.ஏ க்கள்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

congress

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அந்த வகையில் டெல்லியில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மீ கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, தனித்து தேர்தலை சந்திக்கபோவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

Advertisment

ஆம் ஆத்மீ கட்சியும் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்தநிலையில் டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ சந்தீப் குமார் சமீபத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை நேரில் சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சந்தீப் குமார் மட்டுமல்ல மேலும் 9 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அணிக்கு வர தயாராக இருப்பதாகவும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அணி மாறலாம் எனவும் டெல்லி காங்கிரஸ் நிர்வாகி ஜிதேந்தர் கோச்சார் தெரிவித்துள்ளார்.

Delhi Aam aadmi congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe