தனியார் நிறுவனங்களிலும் ஆதார் அட்டையை ஆவணமாகப் பயன்படுத்தலாம்...

ஆதார் கார்டை அடிப்படை அடையாள அட்டையாகப் பயன்படுத்துவதற்கான சட்டத் திருத்தத்திற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆதாரை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசு திட்டங்களுக்கு மட்டும் ஆதாரை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு ஆதாரை பயன்படுத்த அனுமதியளிக்காததால் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக இதை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

aadhar

தற்போது இந்த ஆதார் திருத்த சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதால் மொபைல் சிம் கார்டு வாங்க, வங்கி கணக்கு தொடங்க போன்றவற்றுக்கெல்லாம் இதனை ஒரு ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆதார் திருத்த சட்டத்தின் கீழ் ஆதார் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிப்பது, தேவையில்லாத இடங்களில் கட்டாய ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் அதற்கும் கடுமையான அபராதம் விதிப்பது போன்ற சில திருத்தங்களுடன் ஆதார் விதிமுறைகளில் சில மாற்றம் செய்யப்பட்டு அதற்கு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் தற்போது குடியரசு தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதனால் இனி தனியார் நிறுவனங்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்று ஆதாரை ஒரு அடிப்படை ஆவணமாகப் பயன்படுத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் சிம் கார்டு வாங்க, வங்கி கணக்கு தொடங்க எல்லாம் தேவைப்பட்டால் இதை ஒரு ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

aadhar
இதையும் படியுங்கள்
Subscribe