Advertisment

கூகுளில் கொட்டிக் கிடக்கும் ஆதார் விவரங்கள்! - மீண்டும் மழுப்பும் ஆதார் ஆணையம்

கூகுளில் எக்கச்சக்கமான ஆதார் விவரங்கள் கிடைத்துள்ள சம்பவம் மீண்டும் ஆதார் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது.

Advertisment

மொபைல் எண், அரசு நலத்திட்ட உதவிகள், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் ஆதாரோடு இணைக்கச் சொல்லி கடந்த பல மாதங்களாக அறிவுறுத்தி, மார்ச் 31ஆம் தேதியை காலக்கெடுவாகவும் அறிவித்தது மத்திய அரசு. இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும்வரையில் காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

Advertisment

Aadhaar

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆதார் விவரங்கள் இணையதளங்களில் கிடைப்பதாக புகார்கள் வெளிவருவதும், அதை ஆதார் ஆணையம் மறுப்பதுமாக நகர்ந்துகொண்டிருந்தது. தற்போது தேடுதளமான கூகுளில் Mera Aadhaar meri pehchan filetype:pdf என்று பதிவிட்டு தேடினால் வரும் லிங்குகளில் ஏராளமான ஆதார் விவரங்கள் கொட்டிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல் பெறப்பட்ட சில மணிநேரங்களில் எல்லா லிங்குகளும் செயலிழந்துவிட்டன.

இதுகுறித்து பதிலளித்துள்ள ஆதார் ஆணையம், எங்களது டேட்டாபேஸில் இருந்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்ற மழுப்பலான பதிலை அளித்திருக்கிறது.

Aadhaar BJP UIDAI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe