
புதுச்சேரி அரியாங்குப்பம்ட்ரீம்சிட்டிபகுதியைசேர்ந்தவர் பூர்ணசந்திரன். இவர் அரியாங்குப்பம் புறவழிச்சாலை தேசிய வங்கி அருகேஅரிசிகடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வியாபாரம் முடித்துவிட்டுகடையைபூட்டி விட்டுவீட்டுக்குசென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையைத் திறக்க பூர்ணசந்திரன் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 99 ஆயிரம் ரூபாய் பணமும் இல்லாததால் அரியாங்குப்பத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்துள்ளார் அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us