Published on 19/12/2018 | Edited on 19/12/2018

மும்பையில் நேற்று (18.12.18) நடந்த ரிபப்ளிக் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 99 சதவீத பொருட்கள், அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதமும் 18 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் கொண்டுவர அரசு விரும்புகிறது என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இனிமேல் ஆடம்பர பொருட்கள் மட்டும் 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன் 65 இலட்ச நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தியபிறகு அது மேலும் 55 இலட்சம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.