Advertisment

பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

 97 children admitted to hospital after eating Panipuri

கண்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட குழந்தைகள் பானிபூரி வாங்கி சாப்பிட்ட நிலையில் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலம் மன்டலா அருகே சிங்கர்பூர் என்னுமிடத்தில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் பானிபூரி விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.குறிப்பிட்ட ஒருகடையில் பானிபூரி வாங்கி சாப்பிட்ட 97 குழந்தைகள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பானிபூரி சாப்பிட்ட உடனே வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சாலையோர கடை ஒன்றில் தொழிலாளி ஒருவர் சாக்கடை நீரில் பாத்திரங்களை கழுவும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

incident MadhyaPradesh panipuri
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe