கேரள மாநிலம் ஆலப்புழாவைசேர்ந்த 96 வயது பாட்டி முதியோருக்கான கல்வித்திட்டத்தில் நடத்தப்பட்ட தேர்வில் 98 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
கேரள மாநிலத்தில் இளமையில் கல்வி இழந்தவர்களுக்காக ''அட்ஷரலட்ஷம்'' எனும் முதியோர் கல்வி திட்டத்தை கேரளா கல்வித்துறை வைத்திருக்கிறது.
கேரள மாநிலம் ஆலப்புழாவைசேர்ந்த 96 வயது பாட்டி கார்த்தியாயினிமுதியோர் கல்வி திட்டத்தின் கீழ் கல்விப் பயிற்சிபெற்று அதற்கான இறுதித் தேர்வை எழுதி உள்ளார். இந்த தேர்வில் தேர்வு எழுதியவர்கள் சுமார் நான்காயிரம் பேர் தேர்ச்சி அடைந்தநிலையில் இத்தேர்வினை எழுதிய 96 வயது பாட்டியான கார்த்தியாயினி 98 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கல்விக்கு வயது ஒரு அவசியம் இல்லை. எந்த வயதிலும் கல்வியில் தேர்ச்சி பெறலாம்என விளக்கத்தைகூறி மேலும் அசத்தியுள்ளார்.