நேற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் நக்சல் இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில் 8 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டனர். இதனால்பொங்கி எழுந்த அந்த கிராம விவசாயிகள் பெரும் போராட்டதை நடத்தினர். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழுக்கமும், ஆயுதத்தால் மட்டுமே ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும் என்ற எண்ணங்களே இந்த இயக்கத்தை வளர்த்தது. மேற்கு வங்கத்தில் இருந்து படிப்படியாக கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, தமிழகத்திலும் நக்சல் இயக்கம் பரவியது.
இந்நிலையில் நேற்று நடந்த மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்டவாக்குப்பதிவில் 90 சதவீதம் பேர் நக்சல்பாரி கிராமத்தில் வாக்களித்துள்ளனர். மொத்தம் உள்ள 906 பேரில் 827 பேர் வாக்களித்துள்ளனர். ஒரு காலத்தில் தேர்தலை புறக்கணித்த இந்த நக்சல்பாரி கிராம மக்கள் ஆர்வத்துடன் 90 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.