தமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மாநில வாரியாக மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 15 கோடி பேரும், தமிழகத்தில் 90 லட்சம் பேரும் மதுப் பழக்கம் உடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 3.86 கோடி பேருக்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு மதுப்பழக்கம் - மத்திய அரசு தகவல்!
Advertisment