Advertisment

சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்... பொதுமக்கள் போராட்டம்...

மும்பையின் ஜுஹு பகுதியில் சாக்கடையிலிருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

9 year old girl dead body found in drainage

9 வயதான அந்த சிறுமியின் உடலை அங்குள்ள உள்ளூர் மக்கள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவலளித்தனர். அங்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் உரிய நீதி வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜுஹூவின் கூடுதல் காவல்துறை ஆணையர் மனோஜ் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

MUMBAI POLICE Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe