Advertisment

9 வந்தே பாரத் ரயில் சேவைகள் நாளை தொடக்கம்

 9 Vande Bharat train services start tomorrow

9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப்பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்தியரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி திருநெல்வேலி -சென்னை, உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை, பாட்னா - ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா - பூரி, ராஞ்சி - ஹவுரா என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி காணொளிகாட்சி வழியாக நாளை கொடியசைத்துத்தொடங்கி வைக்க உள்ளார்.

Advertisment

Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe