Advertisment

இராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்

9 soldiers incident Leaders condolence

இந்திய இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

லாடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் தரையில் சறுக்கியபோது, நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனத்தில், ஒரு ஆணையர் உட்பட எட்டு ஜவான்கள் என மொத்தம் பத்து இராணுவ வீரர்கள் பயணம் செய்த நிலையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

Advertisment

இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

LADAK
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe