Advertisment

இரண்டு நாட்களில் 9 சிறுமிகள் மாயம்; காப்பகத்தில் போலீஸ் குவிப்பு..

del

Advertisment

டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆதரவற்றோர்காப்பகத்திலிருந்து 9 சிறுமிகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த 9 பேரும் கடந்த இரண்டு நாட்களில் தான் காணாமல் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் அந்த விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்கள் பற்றியும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

mercy home Delhi missing girl
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe