Advertisment

விதிகளை மீறி கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளால் ஏற்படும் மரணங்கள்...!

முறையான சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் லாரிகளிலும் பெரிய டிரக்குகளிலும் ஏற்றி செல்லப்படும் கட்டுமான பொருட்களால் வருடத்திற்கு கிட்டத்தட்ட 9,000 பேர் மரணிப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் குறிப்பாக கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளால் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றது.

Advertisment

protruding

நீளமான இரும்பு கம்பிகள் போன்றவையை அதற்கேற்றார் போன்ற வாகனங்களில் எடுத்து செல்ல வேண்டும் என்கிறது வாகன சட்டம். ஆனால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் இந்த விதிமுறையை கடைபிடிப்பதில்லை. இவ்வாறு வாகனத்தை விட்டு வெளியே வரும் அளவிற்கு ஒரு பொருளை ஏற்றி சென்றால் தற்போது இருக்கும் வாகன சட்டத்தின்படி முதல் முறை ரூ. 1,000 மற்றும் இரண்டாவது முறை ரூ. 2,000 என அபராதங்கள் விதிக்கவேண்டும் என்கிறது.

இந்த சட்டம் நடைமுறையில் இருந்தும் 2016-ம் ஆண்டு நடந்த 22,700 சாலை விபத்துக்களில் கிட்டத்தட்ட 8,500 பேர் சாலைவிதிகளை மீறி பொருட்களை ஏற்றி சென்றலாரிகளின் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் அதே ஆண்டிலே 21,200 பேர் கயமடைந்துள்ளனர். இவை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

protruding Trucks
இதையும் படியுங்கள்
Subscribe