8.50 lakh prize if '56 inch Modiji' wins

பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி உணவகம் ஒன்றில் உணவு சாப்பிடும் போட்டியில் வெற்றி பெறும் தம்பதிக்கு 8.50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாளை பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி டெல்லியில் உள்ள உணவகம் ஒன்று போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி நாளை முதல் 26ம் தேதி வரை தங்கள் உணவகத்தில் 56 வகையான உணவுகள் வழங்கப்படும் என்றும் அந்த உணவுத் தொகுப்பிற்கு ‘56 இன்ச் மோடி ஜி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் உணவில் வழங்கப்படும் 56 வகையான உணவுகளை 40 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்கும் தம்பதிகளுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் எனவும் அவர்கள் கேதர்நாத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.