விவசாயத்தில் குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விளைவிக்கும் காய்கனிகளால் மனிதர்களுக்கு தீங்குவிளைகிறது. அதனால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆபத்து விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளாக சுமார் 86 பூச்சிக்கொல்லிகள் இருக்கின்றதாகவும், அவை அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அவ்வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டனர். பின், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.