ஹிமாசல் பிரதேசம் குலு மணாலியில் சர்வதேச தசரா திருவிழாவின் மூன்றாம் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. புகழ் பெற்ற சுற்றுலா மையமான குலுவில் ஒரே நேரத்தில் எட்டு ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களது பாரம்பரிய ஆடையினை அணிந்து நடனம் ஆடினர்.
இந்த பாரம்பரிய நடனம் மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இதன் வாயிலாகத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம், போதையில்லா சமூகத்தை உருவாக்குதல் பெண் கல்வி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குலு மணாலியை சுற்றிப்பார்க்க வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நடனமாடி மகிழ்ந்தனர். கடந்த சில தினங்கள் முன் குலுவில் நடைபெற்ற இந்த தசரா திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.