Skip to main content

ஒரே நேரத்தில் 8000 பெண்கள் நடனம்; பாரம்பரிய உடையில் அசத்தல்

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

8000 women dancing at once; Goofy in traditional attire

 

ஹிமாசல் பிரதேசம் குலு மணாலியில் சர்வதேச தசரா திருவிழாவின் மூன்றாம் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. புகழ் பெற்ற சுற்றுலா மையமான குலுவில் ஒரே நேரத்தில் எட்டு ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களது பாரம்பரிய ஆடையினை அணிந்து நடனம் ஆடினர். 

 

இந்த பாரம்பரிய நடனம் மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இதன் வாயிலாகத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம், போதையில்லா சமூகத்தை உருவாக்குதல் பெண் கல்வி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

 

குலு மணாலியை சுற்றிப்பார்க்க வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நடனமாடி மகிழ்ந்தனர். கடந்த சில தினங்கள் முன் குலுவில் நடைபெற்ற இந்த தசரா திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நல்லா காது சவ்வு கிழியட்டும்...' திருவிழாவில் சேட்டை செய்த இளைஞர்களுக்கு ஹாரன் தண்டனை  

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

 'Let the good eardrum tear...'-haron punishment for disruptive youths

 

வடமாநிலங்களில் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கேடா பகுதியில் நவராத்திரியை ஒட்டி 'கர்வா' நிகழ்ச்சி நடைபெற்ற போது சில நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இளைஞர்கள் சிலரை பிடித்த போலீசார் அவர்களை பொதுவெளியில் மக்கள் முன் நிறுத்தி லத்தியால் அடித்தனர். அந்த பகுதி மக்கள் அதனை கை தட்டி வரவேற்றனர். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த காட்சிகள் பலரின் கண்டனங்களை பெற்றது.

 

 'Let the good eardrum tear...'-haron punishment for disruptive youths

 

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தசரா விழாவில் பொம்மை ட்ரம்பெட்களை வைத்து சத்தம் எழுப்பி, வருவோர் போவோரை சில இளைஞர்கள் இடையூறு செய்துள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த பொம்மை ஹாரன் ட்ரம்பெட்களை அவர்கள் காதிலேயே ஊதியும், இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி காதில் ஊத வைத்தும் தண்டனை கொடுத்தனர். 

 

 

Next Story

புகழ்பெற்ற தசரா... பக்தர்களின் கோஷம் தரை அதிர மகிஷாசூரனை வதம் செய்த குலசை தேவி ஸ்ரீ முத்தாரம்மன்

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

உலகப் புகழ்பெற்ற கர்நாடகாவில் மைசூர் தசரா பெருவிழாவிற்கு அடுத்த இடத்தில் இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.

 

குலசேகரன்பட்டினத்தின் ஞான மூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் அருள் பாலிக்கிறார் தேவி ஸ்ரீ முத்தாரம்மன். பண்டைய காலத்தில் குலசேகரன்பட்டினம் மன்னர்களின் கடல் வணிகம் தொடர்பான தலைவாயில் துறைமுகமாக இருந்தது. கடல் வணிகத்தில் ஈடுபடும் வணிகர்கள் கடற்கரையில் ஆலயமாய் அருள்பாலிக்கும் ஸ்ரீமுத்தாரம்மனை தரிசித்து விட்டுக் கிளம்புவர். அவர்களின் மூலமாக குலசை முத்தாரம்மன் ஆலயமும், தசார திருவிழாவும் கடல் தாண்டி பெயர் பெற்று சிறப்பு வாய்ந்ததுண்டு. காலப் போக்கில் குலசை துறைமுகத்தின் பயன்பாடுகள் குறைந்து துறைமுகம் மாற்றப்பட்டது.

 

அது போல் பல்வேறு சிறப்புகளையும் மகிமையையும் கொண்ட முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா வருடம் தோறும் 10 நாள் திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு. முக்கிய நிகழ்வாக தசரா அன்று முத்தாரம்மன் கடற்கரையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிற அரிய காட்சியை காண தமிழகத்தின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. அங்கு திரளும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் அம்மனை விடிய விடிய தரிசிப்பர்.

 

அது சமயம், பக்தர்கள், கிராமங்கள் தோறும் தசரா குழுக்கள் அமைத்து மாலை அணிந்து விரதமிருப்பர் விழா நடக்கிற 10 நாட்களிலும், தங்களுக்கு பிடித்தமான காளி, பத்ரகாளி, சடாமுனிகள், வேடன் வேடுவர் போன்ற பல்வேறு வகையான வேடமணிந்து வசூல் செய்த காணிக்கைகளை நேர்ச்சையாக ஆலயத்தில் செலுத்துவர். தசரா குழுக்கள் தீச்சட்டி ஏந்தியும் குலசை வருவதுண்டு.

 

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கரோனா தொற்று லாக்டவுன் காரணமாக பக்தர்களின் பங்கேற்பின்றி குலசையில் மகிஷா சூரசம்ஹார நிகழ்வுகள் நடந்தன. இந்த ஆண்டு குலசை முத்தாரம்மன் தசரா நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன. இடைவெளி காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குழுமினர். இந்த ஆண்டு தசரா திருவிழா செப் 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது பத்து நாட்கள் விழாவாக சிறக்கிற ஒவ்வொரு தினமும், இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது. அது சமயங்களில் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தேறியது.

 

விழாவின் முத்தாய்ப்பான 10ம் திருவிழாவான அக் 05 அன்று சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைக்குப் பின்பு நள்ளிரவு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பு எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்ததோடு பக்தர்களின் ஒம்காளி, ஜெய்காளி என பக்திகோஷங்கள் தரையதிரக் கிளம்ப தேவி ஸ்ரீ முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார். சம்ஹாரம் முடிந்த உடன் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அம்மனுக்கு அதிகாலை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு, சாந்தாபிஷேக ஆராதனையும் பின்னர் திருத்தேரில் பவனி வந்து தேர்,நிலையம் சென்றடைதலும் நடந்தது. அன்றைய தினம் பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்களின் விரதத்தை முடித்துக் கொண்டனர்.

 

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அத்யாவசியமான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் குலசை தசரா திருவிழாவின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனின் தலைமையில், கண்காணிப்பின் கீழ் சுமார் 2100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.