Advertisment

குஜராத்தில் புத்தருக்கு 80 அடியில் சிலை....

budha

Advertisment

குஜராத்தில் சர்தார் வல்லபாய் சிலை திறந்துவைக்கப்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு சிலைகளை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் பூத்தருக்கு என்று ஒரு சிலை கட்டப்பட உள்ளதாக சங்காகயா அறக்கட்டளை புத்தமத அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரமாண்ட சிலைக்காக குஜராத் அரசிடம் நிலம் கோரியுள்ளதாகவும் இந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் பாந்தே பிரஷில் ரத்னா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,” குஜராத்தில் புத்தருக்கு என்று சிலை அமைக்க உள்ளோம். படேல் சிலையை உருவாக்கியவர்தான் இந்த புத்தர் சிலையையும் வடிவமைக்க உள்ளார். இந்த சிலைக்காக மாநில அரசிடம் நிலம் கோரியுள்ளோம், எங்களுக்கான இடம் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல குஜராத்தில் புத்தர் பல்கலைக்கழகம் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

budha statue Gujarath sardhar
இதையும் படியுங்கள்
Subscribe