8-year-old girl incident at andhra pradesh

Advertisment

ஆந்திரப் பிரதேச மாநிலம், நந்தியால மாவட்டம் முச்சுமரி பகுதியைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், காலையில் வெளியே விளையாட சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால்சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், சிறுமி கிடைக்காததால், அவர்கள் முச்சுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியைத்தேடி வந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், மோப்பநாய் உதவியோடு போலீசார் தேடி வந்தனர். அதில் மோப்பநாய் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளது.

அந்தச் சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. அதில், சிறுவர்களில் 2 பேர் 6ஆம் வகுப்பும், ஒருவன் 7ஆம் வகுப்பும், காணாமல் போன சிறுமி படித்த பள்ளியில் தான் படித்துள்ளார்கள். பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஒதுக்குபுற இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தச் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்ற பயத்தில் சிறுமியை கொன்று அருகில் உள்ள கால்வாயில் உடலை வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது.

Advertisment

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியைத்தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 8 வயது சிறுமியை, சிறுவர்கள் மூவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.