Advertisment

பாஜக கட்சியினரிடம் 8 கோடி ரூபாய் பணம் பறிமுதல்: காவல்துறை அதிரடி...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

8 crore cash seized in telangana from bjp workers

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக உதவியாளர் ஒருவரிடம் சரியான ஆவணங்கள் இன்றி 8 கோடி ரூபாய் பணத்தை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி நாராயண்குடா பகுதியில் வந்த ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த பணத்தை கொண்டு வந்தவர்கள், இந்த பணம் பாஜக உதவியாளர் கோபி என்பவருடைய பணம் என தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனையடுத்து கோபியை தேடி வங்கிக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது கோபியுடன் ரூ. 6 கோடி பணத்துடன் 4 பேர் அங்கு நின்றுள்ளார். அவர்களிடம் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 8 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக சார்பில் தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

telangana loksabha election2019
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe