78th Independence Day Celebration; Red Fort in readiness

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது.

Advertisment

ஆயிரக்கணக்கானோர் அங்கே பிரதமர் மோடியின் உரையைகேட்பதற்காக கூடியுள்ளனர். முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பின்னர் செங்கோட்டை சென்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற இருக்கிறார். முன்னதாகமுப்படையின் அணிவகுப்பு மரியாதையையும் மோடி ஏற்றுக்கொள்ள இருக்கிறார். சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment