நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைத்தார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவில் உள்ள ராஜ்பவனில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.