ADVERTISEMENT

மணிப்பூருக்குள் சட்ட விரோதமாகப் புகுந்த 718 பேர்; அரசின் அடுத்த அதிர்ச்சி

04:38 PM Jul 25, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது மணிப்பூர் அரசு. இதனிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட, 5வது நாளான இன்றும் இரு அவைகளும் முடங்கியது.

இந்த நிலையில் மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் 718 பேர் அகதிகளாக ஊடுருவியுள்ளனர் என்றும், மியான்மரில் இருந்து ஊடுருவியவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்கத் தவறியுள்ளனர் என்றும் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து மணிப்பூர் உள்துறை அமைச்சகம் அசாம் ரைபிள் படையிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதில் முறையான பயண ஆவணங்கள் மற்றும் விசா இல்லாமல் 718 பேர் எப்படி மணிப்பூருக்குள் வந்தனர் என்பதையும் அசாம் ரைபிள் படையிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT