Advertisment

காதலுக்கு வயது தடையில்லை என்று நிரூபித்த ஜோடி!

j

70 வயது முதியவர் ஒருவர் 55 வயது பெண்ணைகாதலித்துத் திருமணம் செய்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்திய பிரதேசமாநிலம் அசோக் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம்கர் சிங். 70 வயதான இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அடுத்த படுக்கையில் குடிபாய் என்ற 55 வயதுள்ள பெண்ணும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது பேசியுள்ளனர். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் ஓம்கார் சிங் தன்னுடைய வீட்டில், மகன்களிடம் பேசி திருமணத்துக்குச் சம்மதம் வாங்கியுள்ளார். அதேபோன்று குடிபாய் அவருடைய வீட்டில் பேசி திருமணத்துக்கு ஒப்புதல் வாங்கியுள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தச் செய்தி உத்திரபிரதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்று இந்த ஜோடி நிரூபித்துள்ளது.

Advertisment

love
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe