Skip to main content

என்ஜினியர்களுக்கு பாடம் எடுக்கும் 7வயது சிறுவன்!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
ani

ஹைதராபாத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவன் 30 என்ஜினியர்களுக்கு டிசைனிங் மற்றும் ட்ராஃப்டிங் வகுப்பு எடுத்து வருவது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 
 

மொஹம்மத் ஹசன் அலி என்று அழைக்கப்படும் இந்த சிறுவன், டிசைனிங் மற்றும் ட்ராஃப்டிங்கில் சிறந்து விளங்குகிறார். தனக்கு தெரிந்ததை தேவையான என்ஜினியர்களுக்கு சொல்லித் தருகிறார். மெக்கானிக்கல், எலக்டிரிக்கல் மற்றும் சிவில் ஆகிய என்ஜினியர்களுக்கு சொல்லித் தருகிறார். அதுவும் இலவசமாக என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் இணையத்தை வைத்தே முழுவதுமாக கற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தனது நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜகவின் குதிரை பேரம்; பறந்த ஜார்க்கண்ட் எம்.எல்ஏக்கள்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
BJP's Horse Bargain; Jharkhand MLAs who flew to Hyderabad

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சராக பதவியேற்க தீவிரம் காட்டி வரும் சம்பாய் சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக குதிரை பேரம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.