A 7 Year Old, UP Man Returns Home After 30 Years

உத்தரப் பிரதேச மாநிலம், சாஹிபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் கடந்த 8 செப்டம்பர் 1993ஆம் ஆண்டில் தனது சகோதரியுடன், டெல்லி அருகில் உள்ள காசியாபாத் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சில மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித பயனும் அளிக்கவில்லை.

Advertisment

இதற்கிடையில் கடத்தல்காரர்கள் 7 வயதான ராஜுவை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று, அவரை தொடர்ந்து அடித்து வேலை செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர். ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்தாலும், மாலை நேரத்தில் ஒரே ஒரு ரொட்டி மட்டும் தான் கொடுத்துள்ளனர். இரவில் தப்பிக்க முடியாத அவரை கட்டி வைத்துள்ளனர்.

Advertisment

இத்தனை ஆண்டுகள் அங்கு இருந்து, ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்து டெல்லிக்கு செல்லும் ரயிலில் ராஜு ஏறியுள்ளார். எந்த நகரம் என்பது நினைவில் இருந்தாலும், எந்த பகுதியில் வாழ்ந்தார் என்பதையும் பெற்றோரின் பெயரையும் மறந்துவிட்டார். ராஜு தலைநகரை அடைந்ததும், பல காவல் நிலையங்களுக்குச் சென்று விசாரித்துள்ளார். ஆனால், எங்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஐந்து நாட்களுக்கு முன்பு, காசியாபாத்தில் உள்ள கோடா காவல் நிலையத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார். அங்கு எனக்கு உணவு, தண்ணீர், காலணி ஆகியவற்றை ஏற்பாடு செய்து அவரை பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களிலும் ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ராஜுவின் மாமா போலீசாரை தொடர்புக் கொண்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்துள்ளார். இது குறித்து ராஜு கூறுகையில், ‘நான் இப்போது நன்றாக உணர்கிறேன். நான் அனுமனுக்கு நன்றி கூறுகிறேன். அவர் என்னை என் குடும்பத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்று பல நாட்களாக வேண்டிக் கொண்டேன்’ என்று கூறினார். 7 வயதில் கடத்தப்பட்ட 37 வயதில் வீடு திரும்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment