Advertisment

ஆயில் டேங்கரை சுத்தம் செய்ய இறங்கிய 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு; காக்கிநாடாவில் பெரும் சோகம்

7 workers who went down to clean the oil tanker lost their lives; great tragedy in Kakinada

சமையல் எண்ணெய் தொழிற்சாலையில் கட்டுமான பணியின் போது ஆயில்டேங்கரை சுத்தம் செய்ய இறங்கிய ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டம் ரங்கம்பேட்டை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக சமையல் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. தொழிற்சாலையில் தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட ஆயில் டேங்கரை சுத்தம் செய்வதற்காக இன்று காலை சுமார் 7 மணி அளவில் தொழிலாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர்.

Advertisment

அப்பொழுது உள்ளே எண்ணெய் கசிவுகள் இருந்தது. அவற்றிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி உள்ளே இறங்கிய ஏழு தொழிலாளர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளே இறங்கிய மீட்பு குழுவினர் ஏழு பேரின்சடலங்களை மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

incident Andhra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe