'5 பசங்க...மனைவி...2 நாய்... தட்டுமுட்டு சாமான்' பைக்கை லோடு ஆட்டோவாக மாற்றிய நபர்!

இந்தியாவில் தற்போது சாலை விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதற்கான அபராத தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சாலை விதிகளின் படி இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். மூன்று பேர் பயணித்தால் கூட அது குற்றமாகும். சாலை விதிகள் இப்படி இருக்க, ஒரே பைக்கில் 7 பேர், இரண்டு நாய்கள், வீட்டு பொருட்கள் என பெரிய குடும்பமே பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிகவும் ஆபத்தான முறையில், ஒரு குடும்பமே ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிப்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பைக் ஓட்டுபவரை தவிர்த்து மொத்தம் 6 பேர் மிகவும் நெருக்கமாக அமந்திருக்கின்றனர்.

zsf

மனிதர்கள் மட்டுமின்றி இரண்டு நாய்களும் பயணம் செய்கின்றன. ஒரு நாய், பக்கவாட்டில் மாட்டப்பட்டிருக்கும் பையில் அமர்ந்திருக்கிறது. மற்றொரு நாய் பைக்கின் முன் பகுதியில் அமர்ந்திருக்கிறது. சாலையில் சென்ற நபர் எடுத்த இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. இது பைக் என்பதையே மறந்து விட்டார் போல, இது பைக் அல்ல, லோடு ஆட்டோ என பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.

traffic traffic policce
இதையும் படியுங்கள்
Subscribe