MILK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அன்றாட உணவில் முதன்மை உணவு பொருள்பால், பாலை நேரடியாகவோ அல்லது டீ, காபி என ஏதோவொரு வகையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தியாகும் பாலில் 68.7 சதவிகிதம் தரமான பால் அல்ல என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இதுபற்றிஇந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா கூறுகையில், நம் நாட்டில் மத்திய உணவு பாதுக்காப்பு துறை மற்றும் தரநிர்ணய ஆணையம் வகுத்துள்ள தரத்தில் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 68.7 சதவீதபால் கலப்படம் நிறைந்த பாலாகவே இருக்கிறது. பாலில் சோப்புத்தூள், வெள்ளை பெயிண்ட்,காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், ரீபண்ட் ஆயில் போன்றவை கலக்கப்படுகிறது, அதேபோல் பால் கெட்டுப்போகாமல் இருக்கயூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவையும் கலக்கப்படுகிறதுஎன கூறினார். மேலும் இந்த நிலை தடுக்கப்படமால்தொடர்ந்தால்கலப்பட பாலை பயன்படுத்துவதாலேயேவரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 87 சதவிகித புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.