Advertisment

கடைசி நாளில் 68 லட்சம் பேர் வருமானவரிக் கணக்கு தாக்கல்!

68 lakh people filed income tax returns on the last day!

Advertisment

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று (31/07/2022) 68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31- ஆம் தேதி அன்று கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று 68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இதன்மூலம், 2021- 2022 ஆம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 5.73 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று (01/08/2022) டிசம்பர் மாதம் 31- ஆம் தேதி வரை அபராதத்துடன் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யலாம். ஆண்டு ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் வருமான உள்ளவர்களுக்கு 5,000 ரூபாயும், ரூபாய் 5 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe