
65-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் விஞ்ஞான் பவனில் தொடங்கியது. குடியரசுத்தலைவர் விழாவில் பங்கேற்காததால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தேசிய விருதுகளை வழங்கினார்.
கடந்த 64 வருடங்களாக குடியரசுத்தலைவர்தான் தேசிய விருதுகளை வழங்கி வருகிறார். தற்போது மட்டும் மத்திய அமைச்சர் விருது வழங்குவது நியாயமில்லை. குடியரசுத்தலைவரிடம்தான் விருதை வாங்குவோம். அதுதான் மரபு. அதைவிடுத்து மத்திய அமைச்சரிடம் இருந்தெல்லாம் வாங்க முடியாது என்று ஸ்மிருதி ரானியிடம் விருதை வாங்க மறுத்து, குடியரசுத்தலைவர் வந்து விருதுகளை வழங்கக்கோரி 68 திடைப்பட கலைஞர்கள் டெல்லியில் விஞ்ஞான் பவனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டம் நடத்தும் 68 கலைஞர்களை தவிர்த்து மற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

Follow Us