66-year-old former Indian cricketer marries 38-year-old woman

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மேற்குவங்க ரஞ்சி அணியின் தற்போதைய பயிற்சியாளருமான அருண்லால் (வயது 66) என்பவருக்கும், அவரது நண்பரும் ஆசிரியையுமான புல்புல் சாஹா (வயது 38) என்பவருக்கும் வரும் மே 2- ஆம் தேதி அன்று திருமணம் நடக்கவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.

Advertisment

ஆனால், இவர்களின் திருமணத்தில் பின்னணியில் பல தகவல்கள் உள்ளன. கிரிக்கெட் வீரரான அருண் லால் முதல் முறையாக ரீனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, அருண்லாலும், ரீனாவும் பிரிந்தனர். இருப்பினும், ரீனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருண்லால் அவருடன் நீண்டக் காலமாக கூடவே இருந்து கவனித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், தனது முதல் மனைவின் ஒப்புதலை தொடர்ந்து, அருண்லால் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார். புதியதாக திருமணம் செய்துக் கொள்ளும் அருண்லால் மற்றும் புல்புல் சாஹா ஜோடிக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.