Advertisment

8 வயதில் 6.6 அடி உயரம்... வருடத்திற்கு 4 அங்குலம் வளரும் சிறுவன்!!

sd

உ.பி மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் கரண் சிங். 8 வயதான சிறுவனாக கரண் சிங்கின் உயரம் 6.6 அடி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் அவர், தன் நண்பர்களை விட இரண்டு மடங்கு உயரமாக இருக்கிறார். கரண் சிங் ஒவ்வொரு வருடத்திற்கும் 4 அங்குலம் வளர்வதாக அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். கரண் சிங் பிறக்கும் போதே 2 அடி உயரும் இருந்தாராம். இரண்டரை வயதில் கரண் சிங்கின் உயரம் 4 அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக குழந்தையின் அம்மா கூறுகையில், " அவன் பிறக்கும் போதே மற்ற பசங்களை விட அதிக உயரமாகத்தான் இருந்தான். நாளடைவில் அவரின் உயரம் மேலும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் பசங்களுக்கு போடும் எந்த உடையும் அவனுக்கு பொருந்தவில்லை. இதனால் பெரியவர்கள் உடுத்தும் ஆடையை அவன் அணிந்து வருகிறான். இதோடு வளர்வது நின்றால் கூட பரவாயில்லை, மேலும் அளவு உயர்ந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார். இந்நிலையில், மகனின் அளவுக்கு அதிகமான வளர்ச்சியினால் அவனை பள்ளியில் சேர்க்க கஷ்டப்பட்டதாகவும், பிறப்பு சான்றிதழ் காட்டித்தான் அவனை பள்ளியில் சேர்ந்ததாகவும் கரண் சிங்கின் தந்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

boy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe