Advertisment

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆறு வயது சிறுமி! - உ.பி.யில் கொடூரம்

நாடே சிறுமிகளின் மீதான வன்கொடுமைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கத்துவா மற்றும் உன்னாவ் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு சம்பவங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

Advertisment

Child

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது சித்தார்த்நகர் கிராமம். இங்கு திருமண நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த சமயம் பார்த்து, வீட்டில் தனியாக இருந்த ஆறு வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவன் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளான். வீட்டில் சிறுமி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடியலைந்துள்ளனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறுமி சுயநினைவின்றி கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

unnao kathuva Child abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe