Advertisment

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு

6 passed away in Hyderabad apartment accident

ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பின் தரை தளத்தில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் திடீரென தீப்பற்றியுள்ளது. மேலும் இந்த தீயானது குடியிருப்பின் மேல் தளத்திற்கு மளமளவெனப் பரவியது. இதில் பல பொதுமக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் குடியிருப்பிற்குள் உள்ள மக்களை மீட்டதோடு, தீயை அணைக்கு முயற்சியில் இறங்கினர். ஆனால் கிடங்கில் அதிகளவில் வேதிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. ஒரு வழியாகத் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.படுகாயமடைந்த சிலர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident police hyderabad
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe