ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன் முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்த நிலையில் மாயாவதியின் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகளாக வெற்றிபெற்ற சில எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று இரவு தாவினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில், உதைய்பூர்வதி தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ராஜேந்திர குட், நத்பய் தொகுதி எம்எல்ஏ ஜோகேந்திர சிங் அவானா, லக்கான் சிங் மீனா (கரோலி) உள்ளிட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர். இவர்கள் 6 பேரும் முதல்வர் அசோக் கெலாட்டுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று சட்டசபை சபாநாயகர் சிபி ஜோஷியை சந்தித்து தாங்கள் 6 பேரும் காங்கிரஸில் இணைந்துள்ளது குறித்த கடிதத்தை அளித்தனர்.