Skip to main content

5ஜி அலைக்கற்றை: முதல் நாளில் ரூபாய் 1.45 லட்சம் கோடிக்கு ஏலம்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

5G Spectrum: Bidding for Rs 1.45 Lakh Crore on First Day!

 

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளனர். 

 

அதிவேக தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று (26/07/2022) தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் நாளில் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்குவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தனர். 

 

ஏலத்தின் முதல் நாளில் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளனர். இது கடந்த 2015- ஆம் ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 37,000 கோடி அதிகமாகும். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னிலையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்றும் நடைபெறவுள்ளது. 

 

வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

 11 மொழிகளில் ஒருநாள் கிரிக்கெட்;  ஜியோ சினிமா இலவச ஒளிபரப்பு!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 ODI cricket in 11 languages; Jio Cinema Free Streaming

 

உள்நாட்டுப் போட்டிகளை, பிசிசிஐ இன்டர்நேஷனலிடமிருந்து பிரத்யேகமாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் திட்டம் குறித்து வயாகாம் 18 இன்று அறிவித்துள்ளது.

 

முதலாவது சர்வதேசத் தொடரை ஜியோ சினிமாவில் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது ஜியோ சினிமா. டி.வி.யிலும், செல்போன் செயலி மூலமாகவும் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த கிரிக்கெட் தொடர் கலர்ஸ் தமிழ் (தமிழ்), கலர்ஸ் பங்களா சினிமா (பெங்காலி), கலர்ஸ் கன்னடா சினிமா (கன்னடா), கலர்ஸ் சினிபிளக்ஸ்  சூப்பர்ஹிட்ஸ் (ஹிந்தி), ஸ்போர்ட்ஸ்-18-1 ஹெச்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 ஹெச்டி (ஆங்கிலம்) ஆகிய 8 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

 

50 ஓவர் உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் கிரிக்கெட் நிபுணர்களின் சிறப்பான கிரிக்கெட் வர்ணனையும் உண்டு. டாடா ஐபிஎல் போட்டி - 2023 நடைபெற்றபோது அனைத்து சாதனைகளையும் உடைத்து, முன்னோடியில்லாத அளவிலான ஈடுபாடு, பார்வையாளர்கள் மற்றும் ஒத்திசைவை நிறுவிய ஜியோ சினிமா தற்போது பார்வையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை இதுவரை கண்டிராத ஜியோ சினிமா டி.வி. வழியாக இலவசமாக வழங்கவுள்ளது வயாகாம்18. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 50 ஓவர்கள் ஆட்டத்தை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும்.

 

இதுகுறித்து வயாகாம்18 - ஸ்போர்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அனில் ஜெயராஜ் கூறும்போது, “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் பார்வையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் புதிய தாயகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் பொறுப்புணர்வுடன், விளையாட்டை ரசிக்கும் விதத்தில் முன்னோடியான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம். இதுவரை பார்த்திராத வழிகளில் ரசிகர்கள் மிகவும் விரும்புவதை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து லீனியர்/ ஆஃப்லைன் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவோம். பிசிசிஐ நடத்தும் தொடர்களை இணையற்ற முறையில் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

 

ஜியோ சினிமா செயலியை (ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட்) செல்போன்களில் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியும். மேலும், சமீபத்திய புதுப்பிப்பு செய்திகள், செய்திகள், விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் சமூக வலைத்தளங்களில் Sports18 -ஐ பின்தொடரலாம். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் வலைத்தளங்களில் Jio Cinema செயலியைப் பின்தொடரலாம்.

 

போட்டி அட்டவணை


செப்டம்பர் 22, முதலாவது ஒருநாள் போட்டி, பகல் 12.30, பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி.
செப்டம்பர் 24, 2வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, ஹோல்கார் ஸ்டேடியம், இந்தூர்.
செப்டம்பர் 27, 3வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, எஸ்சிஏ ஸ்டேடியம், ராஜ்கோட்.

 


 

Next Story

சென்னையில் உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

 5G in 8 cities including Chennai

 

அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி அக்.1 ஆம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட எட்டு மாநகரங்களில் 5ஜி தொழிற்ப சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் தீபாவளியையொட்டி 5ஜி சேவையை பெறலாம் என  அந்நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் அந்த சேவையை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி வசதி உள்ள செல்போன்களில் 5ஜி சேவைக்கான குறுஞ்செய்தி மூலம் தகவல் வாடிக்கையாளர்களுக்கு தகவல் வரும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.